செல்வப் பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தக் கூட்டணியை இயற்கைக்கு முரணானது மற்றும் உண்மைக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்து, தமிழக மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.
செல்வப் பெருந்தகை, பாஜக-அதிமுக கூட்டணி தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருவதாகவும், அதற்கு மாறாக எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து அடிமையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் கூட்டணி, தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக, பாஜகவின் மத்திய அரசின் நலன்களுக்கு உதவுவதாக அவர் கூறி வருகிறார்.

இந்த நிலையில் செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு இன்று விவாத பொருளாக மாறி உள்ளது. பாஜக வோடு கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்தால் 30 இடங்களை வெற்றி பெற்றிருக்கலாம் என செங்கோட்டையன் பேசிருந்தார். அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நீலி கண்ணீர் அமித்ஷா! தமிழ்நாட்டு மக்கள் துரத்தி அடிப்பாங்க... செல்வப் பெருந்தகை திட்டவட்டம்..!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, பாஜக கூட்டணிக்கு மக்கள் கெடு விதித்து விட்டார்கள் என தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்றும் இயற்கைக்கு மாறான கூட்டணி என்றும் தெரிவித்தார்.பாஜக கூட்டணி முழுகப்போகும் கப்பல் என்றும் கூறினார். உறவாடி கெடுக்கும் கட்சி பாஜக என்றும் அதிமுக விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். விழித்துக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் எனவும் விழித்துக் கொள்ளாதவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்! சிக்னல் காட்டிய சசிகலா! மனம் திறந்த செங்கோட்டையன்...