• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீனவர்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருக்கா..? பாஜகவை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை..!

    மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என செல்வப்பெருந்தகை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Editor Sat, 28 Jun 2025 16:01:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    selvaperunthagai-slams-bjp-and-supports-fishermen

    இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர இலங்கை அரசோடு பேச மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

    BJP

    கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், மத்திய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறார். இந்த விவாதத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்று கருத்துகளை கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக பொறுப்புள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. 

    இதையும் படிங்க: மோடி ஆட்சியில் இதெல்லாம் சட்டவிரோதமாக பறிக்கப்படுகிறது.. லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை..!

    BJP

    காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பிரதமர் வாஜ்பாய் 6 ஆண்டுகால ஆட்சியிலும், பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியிலும் கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமர்களோடு எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா ? உண்மையிலேயே மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவு காரணமாக இருந்தால் அதுகுறித்து இலங்கை அரசிடம் பேசியிருக்கலாம். 

    மாறாக, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, பதிலளிக்கும் போது, ‘சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை செய்வது தான் எங்களது நோக்கம்” என்று கூறியிருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று சொன்னால், இந்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்று கூறுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். இதன்மூலம் கச்சத்தீவை மீட்பதற்கு அக்கறையில்லை என்பதைத் தான் இது உறுதிபடுத்துகிறது. 

    BJP

    ஆனால் கச்சத்தீவை வழங்கியது குறித்து, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிலில், இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பகுதியும் வழங்கப்படவில்லை என்றும், எந்த பகுதியும் கையகப்படுத்தப்படவில்லை என்றும் பதில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதேபோல, பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் அன்று தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரொக்டகி தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கை அரசுடன் போரையா தொடுக்க முடியும் ? என்று கூறியதை பா.ஜ.க.வினர் எவராவது மறுக்க முடியுமா ? 

    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 டிசம்பர் வரை 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு பிரதிநிதிகளை கொண்ட கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இக்குழு 2020ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறையும் கூடவே இல்லை. மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசிற்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    BJP

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், இரவு நேரங்களில் சர்வதேச எல்லையை அறியாமல் இலங்கை கடற்பகுதியில் செல்லும் போது கைது செய்யப்படுகிறார்கள். எனவே, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர இலங்கை அரசோடு பேச மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும். இதைப்போன்ற ஒரு பேச்சுவார்த்தை டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின் போது, 2013 இல் இலங்கை அரசோடு நடத்தப்பட்டதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

    எனவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்சினையை திசைதிருப்பக் கூடாது. இதன்மூலம் மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    மேலும் படிங்க
    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    தமிழ்நாடு
    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    குற்றம்
    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியா
    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    தமிழ்நாடு
    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    குற்றம்
    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியா
    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share