• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மழையின் தாக்கம் என்னவானது? மீண்டும் மழை பெய்யுமா, பெய்யாதா? தற்போது என்ன நடக்கிறது என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.
    Author By Amaravathi Sat, 24 Oct 2026 12:06:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilnadu-weatherman-pradeep-john-warns cyclone

    கடந்த வாரம் இதே நாளில் மாலை நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே இடத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. ஆனால், இந்த வாரம் இன்று பல இடங்களில் வெயில் அடிக்கிறது. அப்படியென்றால், மழையின் தாக்கம் என்னவானது? மீண்டும் மழை பெய்யுமா, பெய்யாதா? தற்போது என்ன நடக்கிறது என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.

    தற்போதைய நிலவரப்படி, வளிமண்டலச் சுழற்சியில் இருந்து வடதமிழகக் கடலோரப் பகுதிகள் வழியாக கேரளா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்கெனவே நிலவி வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. அது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, திங்கட்கிழமை புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு ஏற்கெனவே ‘அருணாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இந்தப் புயலால் தமிழகத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், இது வடமேற்குத் திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING அடுத்த 48 மணி நேரத்திற்கு திக்...திக்..!! -‘அர்னாப்’புயல் ஆட்டம் ஆரம்பம்... தமிழ்நாட்டை தாக்க வாய்ப்பா?

    அப்படியென்றால், தமிழகத்தில் மழை பெய்யுமா? தற்போது நிலவும் வெயிலுக்குக் காரணம் என்ன? எப்போது, எங்கு மழை பெய்யும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    இதுதொடர்பாக, வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வரும் பிரதீப் ஜான் சுவாரசியமான வரைபடத்துடன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் அவர் உறுப்பினராக உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய வானிலை நிலவரம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    தற்போது நிலவும் இரண்டு வானிலை அமைப்புகளுக்கு இடையே அறிவியல் ரீதியிலான மோதல் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரபிக்கடலில் ஏற்கெனவே நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும், வங்கக்கடலில் புதிதாக உருவாகி வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையே ஏற்படவுள்ள மோதலை, ‘பிரைம் டைம் ஃபைட் நைட்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குப் பெருமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அதாவது, வங்கக்கடலில் உருவாகி தீவிரமடைந்து வரும் அருணாப் புயலுக்கு முன்னோட்டமாக இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும், அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் ஒரே நேரத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

    அறிவியல் ரீதியாக, இத்தகைய இரண்டு வானிலை அமைப்புகள் அருகருகே நிலை கொள்ளும்போது அவற்றுக்கு இடையே ஒருவித ஈர்ப்பு ஏற்படக்கூடும். ஏற்கெனவே நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிக்கும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திற்கும் இடையே இந்த ஈர்ப்பு மற்றும் மோதல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

    வானிலை ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையே வலிமையான மோதல் ஏற்படக்கூடும். இதில், அரபிக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைத் தன்னை நோக்கி இழுத்து, அதனைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு புதிதாக உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெற்றிபெறும் எனப் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    இந்த இரண்டு வானிலை அமைப்புகளின் மோதல் மற்றும் இணைவு காரணமாக, தமிழகத்தின் வான்பரப்பில் மழைக்குச் சாதகமான மேகக் கூட்டங்களும் பலத்த காற்றுச் சுழற்சியும் உருவாகக்கூடும். இதனால், இன்று பரவலாக மழை இல்லாமல் இருந்தாலும், அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் வானிலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு மிகக் கனமழை பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குறிப்பாக, இந்த வானிலை அமைப்புகள் வளிமண்டலக் காற்றின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கட்கிழமை புயலாக மாறக்கூடும் என்பதால், அந்தப் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதற்குப் பதிலளிக்கும் வகையில், தற்போதைய கணிப்பின்படி ‘அர்னாப்’ புயல் நேரடியாகத் தமிழகத்தையோ சென்னையையோ தாக்காது எனப் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் தமிழகக் கடலோரப் பகுதிகளில் இருந்து விலகிச் சென்றாலும், ஏற்கெனவே நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு ஏற்படுத்தும் மாற்றங்களால், தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கக்கூடும் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தப் புயல் தமிழகத்தை நேரடியாகத் தாக்கும் வாய்ப்பு தற்போதைய கணிப்பில் இல்லை. இருப்பினும், அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் வானிலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கக்கூடும் என்பதையே பிரதீப் ஜானின் பதிவு சுட்டிக்காட்டுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING “ஒண்ணு இல்ல ரெண்டு...” - தமிழகத்தை சுத்துப்போட்ட 2 புயல் சின்னங்கள்... அதி பயங்கர எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    தமிழ்நாடு
    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    தமிழ்நாடு
    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share