திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது பேர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் விஜய்யின் சாலை வலத்தின்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் தாராபுரம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அக்டோபர் 20ஆம் தேதி அதிகாலையில் கார்த்திகாவும் அவரது கணவர் முருகசந்திரகுமாரும் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் தமிழக வெற்றிக்கழகபட்ட நிலையில், கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, கார்த்திகாவுக்கு இரண்டு சிறு மகள்கள் உள்ளதையும் பிற சூழல்களையும் கருத்தில் கொண்டு ஒன்பது பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.அக்டோபர் 23ஆம் தேதி காலை கோவை மத்திய சிறையிலிருந்து கார்த்திகா உள்ளிட்டோர் ஜாமீனில் வெளிவந்தனர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், சட்டப் போராட்டத்தில் கிடைத்த வெற்றியைப் பாராட்டி தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடிய அனைவருக்கும் அவர் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். டெல்லியின் பாஜக அரசைப் போல தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார் சீமான்.
இதையும் படிங்க: ஜெயிலில் இருந்தது பெருமை.!! "ஓம்சக்தி பராசக்தி-னு ஆட்சியை கடத்த முடியாது".! நாதக கார்த்திகா திட்டவட்டம்.!!
இந்தச் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகளையும் அவர் சிறப்பித்துப் பேசினார். அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்த சீமான், தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும் என வாழ்த்தினார்.
இதையும் படிங்க: “கார்த்திகா வந்தாச்சு"..! 9 பேருக்கு ஜாமீன்..! சிறை வாசலில் நாம் தமிழர் தொண்டர்கள் உற்சாகம்..!