ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், எனது பணியை என்றைக்கும் போல் செய்து வருகிறேன்.
உதயகுமார் பற்றிய கேள்விக்கு மன்னிக்கவும், அவர் துக்கத்திலே உள்ளார். அவரது தாயார் இறந்து விட்டார். அவர்கள் வீட்டிற்கு நான் செல்ல முடியவில்லை. அவர் தாயார் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என்னை பொறுத்தவரை பல கேள்விகள் கேட்கிறீர்கள் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்கின்ற வகையில் அடுத்த கட்ட முடிவு என்னவென்றால் அதற்கு காலம்தான் பதில் சொல்லும். என்னால் இன்றைக்கு பதில் சொல்ல இயலாது.
உதயகுமார் போன்றவர்கள் என்னுடன் நன்றாக பழகக் கூடியவர்கள் பண்பாளர் அவரது தாய் இறந்து துக்கத்தில் துயரத்தில் இருக்கிறார். அந்த தாயின் அருமை பெற்ற மகன்களுக்கு தான் தெரியும். ஆகவே இந்த துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: “சிதறு தேங்காய் மாதிரி எங்க கட்சி சிதறியிருக்கு...” - ஆர்.பி. உதயக்குமார் சர்ச்சை பேச்சால் அதிமுகவினர் அப்செட்...!
அதிமுக ஜனநாயக கட்சி தான் என உதயகுமார் கூறி இருக்கிறார் என்ற கேள்விக்கு, நீண்ட நாள் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கு எனக்கு ஜனநாயக முறைப்படி நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும், 15 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் என்னுடைய வேதனை.
வயிற்று எரிச்சல் பிடித்தவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என உதயகுமார் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு, எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், ஊர் ஒன்று கூடினால் தான் தேர் இழுக்க முடியும், எல்லோரும் ஒன்று கூடினால் வெற்றி மட்டுமல்ல மாபெரும் வெற்றி பெற முடியும். அந்த நோக்கத்தோடு தான் நான் சொன்னேன்.
இதையும் படிங்க: அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்