மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், வருகிற 1 - ந் தேதி மதுரை மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசும் போது, நடிகர் விஜய் அதிமுக யாரிடம் இருக்கிறது என மதுரை மாநாட்டில் பேசியதற்கு , நடிகர் சிரஞ்சீவி நடத்திய கட்சியில் விஜய் நடத்திய மாநாட்டை விட அதிகமாக கூட்டம் கூடியது . ஆனால் சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆகையால் விஜய் அதிமுக பற்றி பேசுவதற்கு உரிமை அற்றவர், அவர் மட்டுமல்ல எவருக்கும் அதிமுகவைப் பற்றி பேச உரிமை இல்லை என்றார்.
எம்ஜிஆர் மற்றும் அதிமுக எங்களுக்கு மட்டுமே சொந்தம் ,வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது எனவும் பேசினார்.மேலும் அவர் பேசுகையில், 1989இல் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி, அவரை போய் யார் என்று தெரியவில்லை என்று விஜய் கூறுவது கேலியாக உள்ளது. இவர் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய முடியும்.
இதையும் படிங்க: “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!
எடப்பாடி பழனிச்சாமி பஞ்சாயத்து தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர் என உழைத்து உழைத்து வந்தவர். அவர் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். நடிகர் விஜய் , சிங்கம் எப்போதாவது ஒரு நாள் தான் வெளியே வருவேன் என கூறுகிறார். அவர் எல்லாம் எடப்பாடி பற்றி பேசுவதற்கு உரிமை கிடையாது , அனைவரும் ஒன்று சேர்ந்து தான் எடப்பாடியாரை பொதுச் செயலாளராக கொண்டு வந்துள்ளோம். அப்படிப்பட்டவரை பார்த்து ஒரு நடிகர் இப்போது பேசி வருகிறார் .
சிரஞ்சீவி இவரது கட்சியை விட கூடுதலாக கூட்டத்தை காண்பித்து கட்சி ஆரம்பித்து , அவரால் முடியாமல் கட்சி கலைத்து விட்டுச் சென்றார். சாதாரண கட்சிக்கு எடப்பாடியார் கட்சித் தலைவர் அல்ல, 53 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எங்கள் தலைவர், அண்ணா திமுகவுக்கு தலைவர்எனவும் வேலுமணி பேசினார்.
இதையும் படிங்க: களைப்பிற்கே இடமில்ல! இனி சுறுசுறுப்பு, புன்னகை, ஆர்வம் மட்டும் தான்... முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி