மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கோவையிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி தனது கட்சியை ஒருங்கிணைத்து, மக்களிடையே மீண்டும் செல்வாக்கைப் பெறுவதற்காக இந்த மாபெரும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தின் போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு, அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க விவாதங்களைத் தூண்டியுள்ளார். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு? எங்கள் கூட்டணி மக்களுக்கு நன்மை செய்யும் என்றும் கூறினார். இந்தக் கருத்துக்கள், அதிமுக-பாஜக கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தன. பாஜகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி வருவதை திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமையை முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான் என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஃபீல் பண்ணிக் கூவுகிறார் என்று கிண்டல் அடித்துள்ளார். கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா அல்லது உரிமைகளுக்காகத் தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா முதலமைச்சர், மனிதரை மனிதர் தாழ்த்தி, பிற்போக்குத்தனங்களை நோக்கித் தள்ளும் காவிக் கொள்கையா மக்களுக்கு தேவை என்று கேட்டுள்ளார்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என முற்போக்கு எண்ணங்களால் முன்னேற்றும் கல்விக் கொள்கை தேவையா என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடு விடை சொல்லும் என்றும் துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்கும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: களத்தில் முதல்வர்... வீடுவீடாகச் சென்று பிரச்சாரம்..! பரபரக்கும் திருவாரூர்..!
இதையும் படிங்க: கோட்சே கூட்டத்தின் பின்னால் போகாதீங்க! அரசியல் புரிதல் வேணும்... மாணவர்களுக்கு முதல்வர் சொன்ன அறிவுரை!