சென்னை: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான மாநில உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 17 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பேசிய போது, தமிழகம் காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன்னோடி மாநிலமாக உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் நேரடியாக உணர்ந்து வருவதாகக் கூறிய முதல்வர், சமீபத்தில் டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய போதும், திராவிட மாடல் அரசின் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளதாகவும் அவர் புகழ்ந்துகொண்டார்.
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்த முதல்வர், ஆண்டுக்கு இரு முறை காலநிலை மாற்றம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு! அறிவாலயத்தில் நடந்த மீட்டிங்! 2026 தேர்தல் அப்டேட்!

பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 297 பசுமைப் பள்ளிகளில் கூல் ரூப் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர், போக்குவரத்து நெரிசலும் காற்று மாசும் அதிகரிப்பதற்கு தனியார் வாகன பயன்பாடே காரணம் என்றார். தமிழக வளர்ச்சிக்கு ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றொரு கண் என்று குறிப்பிட்டார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தை பாதித்த பேரிடர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.24,673 கோடி கோரிய போதும், மத்திய அரசு வெறும் ரூ.4,136 கோடி மட்டுமே (17 சதவீதம்) வழங்கியுள்ளதாக கடுமையாக விமர்சித்தார். பல சவால்களை எதிர்கொண்டு தமிழகம் வென்றுள்ளதைப் போல, காலநிலை மாற்ற சவால்களையும் வெல்லும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!