உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் நேற்று முன்தினம் காலணியை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் திங்கட்கிழமை காலையில் நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். இருப்பினும் காலணி நீதிபதி மீது படவில்லை. இதை அடுத்து ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கு காரணமாக, கஜூராஹோவில் உள்ள விஷ்ணு கோவில் சிலை சீரமைப்புக்கு உத்தரவிடக் கூடிய மனுவை விசாரித்த போது, நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால் அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கூறியதாகவும், சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு செருப்பு வீசியதாகவும் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறியதாக தெரிகிறது.

தொடர்ந்து இந்திய பார் கவுன்சிலால் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக தலைவரும் பெங்களூரு முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ் கூறிய கருத்து பேசும் பொருளாக மாறி உள்ளது. சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும் இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலோடு செயல்பட்டதை பாராட்டுவதாக கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க கூடாது... மீறினால் அனுமதி ரத்து... நயினார் தலையில் இறங்கியது பேரிடி...!
இந்த நிலையில் பாஸ்கர் ராவ் கருத்துக்கு கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்டுக்கேடான விஷயம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமலாலயத்தில் திடீரென குவிந்த முக்கிய புள்ளிகள்... தீவிர ஆலோசனை - என்ன காரணம்?