பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. தர்மபுரி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர் வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 27 ஆயிரம் குளங்களை தூர்வாரினால் போதும் 150 tmc வரை நீர் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளார். வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா என்று கேட்டார்.

தாய்மாமன் சீர் நீங்கள் தருவீர்கள்… பாட்டி சீர்., அத்தை சீர் நாங்கள்தானே தரவேண்டும் என்று தெரிவித்தார். கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் மிக மிக குறைவான நிதி ஒதுக்கி உள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம் சாட்டினார். சுமார் 5 கோடி விவசாயிகள் சார்ந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் என்பது போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு சதி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி, போதைப்பொருள் ஒழிப்பு, மது ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அன்புமணி பெற்ற விருதுகளை பட்டியலிட்டு பேசினார்.
இதையும் படிங்க: டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!