முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் எப்போதும் பாஜக - அதிமுக கூட்டணியைப் பற்றி அவர் பேசி வருகிறார்' எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ஈரோட்டில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை போன்றவை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்றுகள். இந்தக் கொலை வழக்கில் இன்று வரை தீர்வு காணப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் எப்போதும் பாஜக - அதிமுக கூட்டணியை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். திருநெல்வேலியில் குடிக்க தண்ணீர் கூட இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீரே வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. இதில் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களும் அக்கறை காட்டாமல், தேர்தல் கூட்டணியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த ஓராண்டுக்கு திமுக எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அப்படியெனில், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. ஆளுநரைப் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, தற்போது ஆளுநரிடம் அதிகார போட்டி இல்லை என்று முதல்வர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?" என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ‘முதலில் ராஜ துரோகி, இப்போது ராம துரோகி’..! ராகுல் காந்தி மீது பாஜக பாய்ச்சல்..!