சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் ஏற்கெனவே பதவியேற்ற நிலையில், இன்னும் 24 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 34 அமைச்சர்கள் கொண்ட கேபினெட் உருவாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் முந்தைய நாளே கேரளாவிலிருந்து சென்னை திரும்புகிறார். அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு புதிய அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்படும்.
தவெகவைச் சேர்ந்த 26 அமைச்சர்களுடன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. முதல் ஆதரவை வழங்கிய காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் ராஜேஷ் குமாருக்கு உறுதியாகியுள்ளது. மற்றொரு பதவிக்கு யாருக்கு வழங்கலாம் என காங்கிரஸ் தீவிர ஆலோசனையில் உள்ளது.
இதையும் படிங்க: சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

அதிமுகவில் இருந்து உடைந்து வெளியேறிய எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் குழுவுக்கு 5 அமைச்சர் பதவிகள் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்தக் குழு முதலில் 8 பதவிகள் கோரியிருந்தது.
விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரு எம்எல்ஏக்களில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். கம்யூனிஸ்ட் கட்சிகளும் திருமாவளவனும் அமைச்சரவையில் இடம் வேண்டாம் என மறுத்துவிட்டனர்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை (மதுவிலக்கு துறை) இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த முக்கியத் துறை யாருக்கு கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, புதிய அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கும். நடப்பு நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த அமைச்சரவை விரிவாக்கம் தவெக ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் போட்டோவை என் ஆபிசில் வைக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் கோவை திமுக மேயர்!