• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    சென்னை காசிமேடு என்4 கடற்கரையை அதிநவீன சுற்றுலாத் தலமாக மாற்றுவது குறித்து அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் மரிய வில்சன் ஆய்வு நடத்தினர். 
    Author By Thenmozhi Kumar Mon, 06 Jul 2026 22:47:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "DMK Can Never Win Elections Again," Slams Tourism Minister Rajeshkumar Over Udhayanidhi's Remarks.

    தமிழகத்தில் ஜனநாயக முறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி தவெக அரசு அரியணை ஏறியுள்ளது; எதிர்க்கட்சியினர் எப்போதுமே புலம்பிக் கொண்டே தான் இருப்பார்கள். திமுகவினர் இனி எந்தக் காலத்திலும் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பே கிடையாது" என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அவர்கள் மிகக் கடுமையான அரசியல் விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கியப் பகுதியான காசிமேடு என்4 கடற்கரையை உலகத் தரத்திலான அதிநவீன சுற்றுலாத் தலமாக மாற்றுவது குறித்து, ராஜேஷ்குமார், தமிழக நிதி அமைச்சரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான மரிய வில்சன் மற்றும் சுற்றுலாத்துறை மேலாண்மை ஆணையர் ஆகியோர் இன்று நேரில் சென்று விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், "ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வாக்குறுதியாகக் காசிமேடு என்4 கடற்கரையைச் சுற்றுலாத் தலமாக மாற்றிக் காட்டுவோம் என மக்களுக்கு உறுதியளித்திருந்தோம். அதன் அடிப்படையில், பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரைகளைப் போலக் காசிமேடு கடற்கரையையும் பிரம்மாண்ட சுற்றுலாத் தலமாக மாற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை வகுக்கவுள்ளோம். இதற்குத் தேவையான கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிகளைப் பெறவும், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்துத் திறமையான நிர்வாகக் குழுவினரைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவைப் போல, இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் மிகச் சிறப்பான உலகத் தரப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று விவரித்தார்.

    இதையும் படிங்க:  கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    tvk

    தொடர்ந்து தவெக அரசு மீதான உதயநிதி ஸ்டாலினின் விமரிசனங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், "தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் 60 நாட்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள் லஞ்சம், லாவண்யம் இல்லாத மிகத் தூய்மையான அரசாங்கமாக இது செயல்பட்டு வருகிறது. அரசு டெண்டர்கள், ஒப்பந்தங்கள், பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை அனுமதிச் சான்றுகள் என அனைத்தும் தற்பொழுது எவ்வித முறைகேடுகளும் இன்றி முழுமையாக ஆன்லைன் வாயிலாகவே வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய புரட்சிகரமான திட்டங்கள் பிடிக்காமல் தான் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் தார்மீகக் கூட்டணியில் இருக்கிறோம். முதலமைச்சரைப் பொறுத்தவரை லஞ்சமற்ற ஆட்சியை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளார். திமுகவினர் இனி மக்களை நேரில் சந்தித்துத் தேர்தலில் வெல்லவே முடியாது" என்று சாடினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், "ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்தக் கடற்கரை உள்கட்டமைப்பு ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட பிறகு இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மீனவ மக்களுக்கு அசுர வேகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மீனவர்களுக்குப் பிரத்யேக உணவகங்கள், கடற்கரையில் சைக்கிள் பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தளங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, காசிமேடு கடலில் ஏற்படும் உயிர்ச்சேதங்களைத் தடுக்க நிரந்தர மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்" என்று உறுதியளித்தார். தவெக அமைச்சர்களின் இந்த அதிரடி உள்கட்டமைப்பு அறிவிப்புகளும், திமுக மீதான நேரடித் தாக்குதல்களும் தற்போது கோட்டை வட்டாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் டிஜிட்டல் பக்கங்களில் மாபெரும் அரசியல் விவாத அலைகளைக் கிளப்பியுள்ளன.

    இதையும் படிங்க: "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு
    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    தமிழ்நாடு
    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    உலகம்
    ட்ரம்ப் போட்ட ஒரே போடு... பணிந்தது FIFA! அமெரிக்க வீரரின் ரெட் கார்டு தடை அதிரடி நீக்கம்!

    ட்ரம்ப் போட்ட ஒரே போடு... பணிந்தது FIFA! அமெரிக்க வீரரின் ரெட் கார்டு தடை அதிரடி நீக்கம்!

    உலகம்
    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    தமிழ்நாடு
    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share