• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கேட்டது 12,000 கோடி! கிடைத்தது 6,000 தான்! மகளிர் இலவச பயண திட்டத்திற்கு புது நெருக்கடி? சமாளிக்குமா தவெக?

    தமிழகம் முழுதும் 12 ஆயிரத்து 695 பஸ்களில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். வெளியூர் செல்லும் ஏசி விரைவு பஸ்களைத் தவிர மற்ற பஸ்களில் பெண் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    Author By Pandian Tue, 27 Oct 2026 13:21:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-women-free-bus-scheme-funding-crisis-6000-cr

    மகளிருக்கான வெற்றி இலவச பயண திட்டத்தை செயல்படுத்த 12 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என அரசு போக்குவரத்து கழகங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், 6,000 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த திமுக ஆட்சியில் சாதாரண கட்டண பஸ்களில் மகளிர் இலவச பயண திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தற்போது வெற்றிப் பயணம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநகர, நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரண கட்டண பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுதும் 12 ஆயிரத்து 695 பஸ்களில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். வெளியூர் செல்லும் ஏசி விரைவு பஸ்களைத் தவிர மற்ற பஸ்களில் பெண் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதையும் படிங்க: சிறையிலிருந்து எஸ்கேப்.! அடுத்தடுத்து சிக்கும் கைதிகள்..! தொடரும் தேடுதல் வேட்டை.!!

    மொத்தமுள்ள 340 பணிமனைகளில் ஒவ்வொரு போக்குவரத்து பணிமனையிலும் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூல் குறைந்துள்ளது. இந்த இழப்பைச் சரிக்கட்ட அரசு சார்பில் போக்குவரத்து கழகங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை. சில பணிமனைகளில் டீசல், உதிரிபொருட்கள் வாங்குவதற்குக் கூட பணம் இல்லாததால் கடும் சிரமத்தில் சிக்கியுள்ளன. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்கள் கேட்ட தொகையில் 50 சதவீதம் மட்டுமே தர அரசு சம்மதம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆட்சியில் 7,000 சாதாரண கட்டண பஸ்களில் மட்டும் மகளிருக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தத் தொகையைப் படிப்படியாக விடுவித்தது.

    BusFunding

    இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்குப் பெரிய அளவில் நெருக்கடி இல்லாமல் இருந்தது. தற்போது இந்தத் திட்டத்தை வெற்றிப் பயணம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்து தமிழகம் முழுதும் மொத்தமாக 12 ஆயிரத்து 695 பஸ்களில் இலவச பயணம் அளிக்கப்படுகிறது.

    தினமும் 84.32 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பெண் பயணியருக்கும் அவரது பயணத்தைக் கணக்கீடு செய்து டிக்கெட் தொகை வழங்க வேண்டும். பின்னர் இதற்கான தொகையைத் தமிழக அரசு விடுவிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பீடு செய்து தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

    ஆனால் இந்தத் தொகையில் 6,000 கோடி ரூபாய் வரை மட்டுமே வழங்க அரசு உறுதி அளித்துள்ளது. மீதமுள்ள தொகை குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. அதிலும் இதுவரை ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை. மேலும் எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை.

    இந்தத் தொகை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு முன்கூட்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    சாதாரண கட்டண பஸ்கள் குறைப்பு தொடர்பாக ஆண் பயணிகள் சிலர் கூறியதாவது: சாதாரண கட்டண பஸ்களில் மட்டும் பெண்களுக்கான இலவச பயணம் இருக்கும்போது அந்த வகை பஸ்கள் அதிகரித்து இயக்கப்பட்டன. தற்போது கடந்த சில வாரங்களாக சாதாரண கட்டண பஸ்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் ஆண் பயணிகள் வேறு வழியின்றி சொகுசு பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்துப் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே சாதாரண கட்டண பஸ்களைக் குறைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இரவு 9:00 மணிக்கு மேல் பஸ்களின் எண்ணிக்கையும் திடீரெனக் குறைக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர் என்றனர்.

    இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு விஜய் முகம் மட்டும் பத்தாது?! தவெக போடும் மாற்றுக் கணக்கு! புது ஸ்கெட்ச்!

    மேலும் படிங்க
    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா

    செய்திகள்

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share