மும்மொழி தேர்ச்சி கட்டாயம் என்பது மொழித் திணிப்பின் மற்றொரு வடிவம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற, மூன்றாவது மொழிக்கான உள் மதிப்பீட்டு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தி மொழியை மறைமுகமாக திணிக்க முயற்சிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழிக்கு தற்போது பொதுத் தேர்வு இல்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்திருந்தாலும், பள்ளி அளவில் நடைபெறும் உள் மதிப்பீட்டு தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சபரி வர்மனுக்கு ஒரு சட்டம்... TVK நிர்வாகிக்கு ஒரு சட்டமா..? முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்த உதயநிதி..!
ஒன்பதாம் வகுப்பில் நடைபெறும் மூன்றாவது மொழி உள் மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 10-ஆம் வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 10-ஆம் வகுப்பில் நடைபெறும் அதே மொழிக்கான உள் மதிப்பீட்டு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழி கட்டாயமாகும் என்றும், அதற்கான உள் மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது மொழியில் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை, இந்தி மொழியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற சிபிஎஸ்இ (CBSE) சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாவது மொழியை முதலில் விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் அதில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பள்ளி அளவில் நடத்தப்படும் மூன்றாவது மொழிக்கான உள் மதிப்பீட்டு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதில் தேர்ச்சி பெற்றால்தான் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்மொழி தேர்ச்சி கட்டாயம் என்பது மொழித் திணிப்பின் மற்றொரு வடிவம் என்றும், இந்த சுற்றறிக்கையை சிபிஎஸ்இ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்
இதையும் படிங்க: முதல்வர் விஜய்தான் களவாணி..! “இரவல் ஆட்சி”..! சிதைந்து போன திமுக… EPS கடும் தாக்கு..!!