டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? என்றும் டாஸ்மாக் சோதனை வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதை அடுத்து வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், தமிழக மக்களின் வரிப்பணம் யார் சுருட்டினாலும் அதற்கு மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஏற்கனவே டாஸ்மாக்கில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. இப்பொழுது வந்திருப்பது இடைக்கால தடைதான். வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் அதை மதிக்கிறோம்... ஆனால் இதை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருப்பதனால் சில சிந்தனைகளை பதிவிடுவது தவறில்லை. முதலில் அமலாக்கத்துறை.. மத்திய அரசு இயக்குகிறது என்று சொல்வதே தவறு. அது தனிப்பட்ட அமைப்பு.. பாஜக ஆளுகின்ற அஸ்ஸாம் ஹிமாச்சல பிரதேஷ் மகாராஷ்டிரா போன்ற இடங்களில் கூட ED ரெய்டுகள் நடந்திருக்கின்றன. டாஸ்மாக்கை பொருத்தமட்டில், இந்த வழக்கின் அடிப்படையே தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 FIR-கள் தான்.
இதையும் படிங்க: புதிதாக வருபவர்கள் முதல்வராக முடியாதா.? உதயநிதி மட்டும் முதல்வராக முடியுமா.? தமிழிசை பொளேர்!

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னபோது.. உயர்நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்து விசாரணை தொடரலாம் என்று சொன்னதன் பேரிலேயே.. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏற்கனவே டாஸ்மாக்கில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.. தவறான பண பரிவர்த்தனையை தான் அமலாக்கத்துறை விசாரணை செய்து கொண்டு இருந்தது.. ஆக ஊழல் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இப்பொழுது வந்திருப்பது இடைக்கால தடையை தவிர இதற்கு மேலும் விசாரணை நடைபெறும். இந்த கருத்துப்பதிவின் நோக்கம், அரசியல் அல்ல. மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் சுரண்டப்படக் கூடாது என்பதுதான்.

இதை காழ்ப்புணர்ச்சி என்று பார்ப்பதை விட மக்களின் பணத்திற்கு ஆளும் அரசு பதில் சொல்லி ஆக வேண்டும் என்ற அடிப்படை தான் இதில் குறிப்பிடப்பட வேண்டும். எது எப்படி இருந்தாலும் இன்று நாம் தமிழக மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணம் யார் சுருட்டினாலும் அதற்கு மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்... இதற்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக அரசு சர்க்காரியா கமிஷனினால் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்பவர்கள் என்ற சர்டிபிகேட்டை பெற்றவர்கள் என்பதை நாம் இங்கே நினைவு கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் தான் இப்படி பண்றாங்க.. தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!!