தமிழ்மகன் உசேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினரும், கட்சியின் அவைத்தலைவருமாக விளங்கும் முக்கிய அரசியல்வாதி. 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்த இவர், தமிழ்நாட்டு அரசியலில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பயணித்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலிருந்தே எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகராக இருந்தார்.
அதிமுக கட்சி தொடங்கப்பட்ட 1972 ஆம் ஆண்டில், கட்சியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்ட 11 தொண்டர்களில் ஒருவராக இவரும் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு மதுசூதனன் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் இடைக்கால அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2022 ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அவர்களால் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிரந்தர அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவி கட்சியின் கௌரவமான பதவியாகக் கருதப்படுகிறது. கட்சியின் உள் பிளவுகள், தேர்தல் ஆணைய வழக்குகள் போன்ற சவால்களுக்கு மத்தியில் இவர் அமைதியாகப் பணியாற்றினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்- க்கு எடப்பாடியார் பதில் கொடுப்பார்... வைத்திலிங்கம் உதிர்ந்த செங்கல்... ஜெயக்குமார் பேட்டி...!
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இவர், எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தமிழ்மகன் உசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிகிச்சையில் உள்ள தமிழ்மகன் உசேனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி அமைப்போம்... எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய EPS உறுதிமொழி...!