திமுக அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி துறையில் வேலை வழங்குவதில் 888 கோடி ரூபாய் ஊழலை வெளிப்படுத்திய அமலாக்கத்ததுறை எப்ஐஆர் பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. அதை மறைக்கும் நோக்கில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்பி அதில் குளிர்காய திமுக அரசு நினைப்பதாக அதிமுகவும், பாஜகவும் மாறி, மாறி குற்றச்சாட்டி வருகின்றன. ஆனால் அடுத்த அதிரடியாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1020 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை ஆதாரத்துடன் தமிழக பொறுப்பு டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி எஐஆர் பதிவு செய்ய வலியுறுத்தியது.
அப்படி பதிவு செய்யவில்லை எனில் இந்த ஊழல்களில் காவல் துறைக்கும் பங்கு இருப்பதாகவே கருதப்படும் என்றும் எச்சரித்தது. மத்திய அரசு காழ்புணர்ச்சியில் செய்கிறது, நகராட்சியின் சாதனைகளை பொறுக்க முடியாமல் அமலாக்கத்துறையை ஏவுகிறது என ஏகத்திற்கு வசனம் பேசும் கேஎன் நேரு அடுத்த செந்தில் பாலாஜி ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய டிஜிபி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
வழக்குப்பதிய வேண்டியவருக்கே நெஞ்சுவலி என்றால் அதில் சிக்கி இருக்கும் அமைச்சர் என்ன கதியில் இருப்பாரோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்கட்சி தலைவர் கூறியது போல நான்கரை ஆண்டுகளாக சிறிதும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கும் ஒவ்வொரு திமுக அமைச்சரும் சிறை செல்ல போவது உறுதி என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கே.என்.நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி...!! - நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு... முக்கிய ஆதாரங்களை வெளியிட்ட ED...!
ஆனால் கடைசி வரை இதனை ஏற்க மறுத்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. தனது துறையின் சாதனைகளை மறைப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கே.என்.நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி...!! - நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு... முக்கிய ஆதாரங்களை வெளியிட்ட ED...!