நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், அவர்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் டெல்லி சென்றடைந்தனர்.
நேற்று இரவு டெல்லி வந்த அவர்கள், நள்ளிரவு ஒரு மணி அளவில் தமிழ்நாடு இல்லத்திலேயே ஆலோசனை மேற்கொண்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதுவரை எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் தாயகம் திரும்பத் தயாராக இருக்கிறார்கள், நேபாளத்தில் தற்போது எத்தனை தமிழர்கள் உள்ளனர், மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கண் முன் அரங்கேறிய கோரம்... ஹை அலர்ட்டில் உ.பி., பீகார்... அமித் ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
இதனைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை நேபாளத்திற்கு உடனடியாக அனுப்புவதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அமைச்சர்கள் குழுவும் நேபாளம் செல்லலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், இன்றும் ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு குழுவில் 37 பேர், 2வது குழுவில் 49 பேர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடம் தெரியாமல் உருகுலைந்து போன நேபாளம்... காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் இவ்வளவா?