தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியராகவும் திகழ்கிறார். உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களுடன் நடைபெற்ற கடுமையான போட்டிகளில் அபாரமான மன உறுதியுடனும் மதிநுட்பத்துடனும் விளையாடி இந்தப் பட்டத்தைப் பெற்றது அவரது அசாதாரண ஆற்றலுக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில் அபாரமான மனஉறுதியுடனும் மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

இந்த மகத்தான வெற்றி இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க திரு.பிரக்ஞானந்தா அவர்களை மனமார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி இந்திய செஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?
இளம் வயதிலேயே உலக அரங்கில் தனது திறமையை நிரூபித்து வரும் அவர், தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் பெயரை உயர்த்தி வருகிறார். செயின்ட் லூயிஸில் நடைபெற்ற இந்தப் போட்டி உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்ற உயர்மட்ட நிகழ்வாகும். அதில் அவர் காட்டிய அறிவுத்திறன், மனச்சமநிலை மற்றும் தந்திரமான ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!