சட்டமன்றத் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ள நேரத்தில், அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
சங்கீதா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இருவருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இதனால், இந்த வழக்கு தேர்தல் சூழ்நிலையில் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.
இரு தரப்பினரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக பிரிந்து செல்லும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சொத்து பங்கீடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கை நீண்டநாள் சட்டப்போராட்டமாக மாறாமல் தவிர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 6 மணிக்கே நடையை கட்டிய விஜய்! அப்படி என்னதான் ஆச்சு? திருப்பூர், சென்னை பிரசாரம் பாதியில் முடிய காரணம்?

தேர்தல் பிரசாரப் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என முன்பு தகவல் வெளியானது. ஆனால், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவரின் சார்பிலும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிவதை உறுதி செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதி, வழக்கை உடனடியாக தீர்ப்பளிக்காமல், மேலதிக நடவடிக்கைகளுக்காக வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், திடீர் ஒத்திவைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தேர்தல் நேரத்தில் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் பொதுவெளியில் பெரிதாக பேசப்படுவது, வாக்காளர்களின் மனநிலையிலும் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சினிமா! பூஜை போட தயாரான தவெக தலைவர் விஜய்! ஜனநாயகன் கசிந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடிவு!!