தமிழக அரசு மருத்துவமனைகளில் குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்தான சர்ஃபேக்டன்ட்-னுக்கு தட்டுப்பாடு நிலவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளர்ந்திருக்காது. அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக்குழாயில் 'சர்பேக்டன்ட்' என்னும் மருந்தை கொடுக்கப்படும். இதன் மூலம் குழந்தையின் உயிரை காக்க முடியும்.
தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கும் மருந்தை தக்கவைத்துக் கொள்வதிலும் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்.
சர்பேக்டன்ட் மருந்து தேவைப்படுமளவு குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை சார்பில் ஸ்டாக் பாதுகாக்கப்படும். அதன் விபரத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் குழு நிறுவனத்திடம் கொடுக்கப்படும். ஸ்டாக் குறையும்போது புதிய ஸ்டாக்குகள் வாங்கப்படும். இது குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். தாய் இறப்பு, குழந்தை இறப்பு சதவீதத்தை நாம் கட்டுப்படுத்தியுள்ளது. 2021 - 2026 வரை 1,000 குழந்தைகளில் 8 குழந்தைகள் இறந்ததாக தரவுகள் சொல்கிறது. 1 லட்சம் தாய்களில் 24 தாய்மார்கள் இறப்பதாக தரவுகள் சொல்கிறது. இது ஐரோப்பியா தரத்துக்கு இணையானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக இருக்கும். தாய்மாமன் தங்க சீர் திட்டத்தில், மருத்துவ உபகரணங்களில் பிரச்சனை எழுந்துள்ளது.
இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்தை இருப்பு வைப்பதை விட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக 756 கோடி ரூபாயை வாரி இறைக்கத் தயாராகும் விஜய் அரசை திமுக ஐடி விங்க் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: உடலுறுப்பு தானம்.. மறுவாழ்வுக்கு வழிகாட்டும் கொடையாளர்கள்..! முதல்வர் விஜய் பெருமிதம்.!!
இதுகுறித்து திமுக ஐ.டி. விங்க் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு கடந்த சில மாதங்களாகக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைக்கு மூச்சு விட மருந்து வாங்கத் துப்பில்லை. ஆனால், முதலவர் அரசியல் சுயவிளம்பரத்திற்காகவும் வாக்கிற்காகவும் 756 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு '1 கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தைத் தொடங்கவுள்ளார்.
தங்க மோதிரம் கொடுப்பதால் மருத்துவர்கள், படுக்கைகள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியாது என்று மருத்துவர்களே தலையிலடித்துக் கதறுகிறார்கள். மூச்சுத் திணறும் குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து கொடுப்பதுதான் உண்மையான நிர்வாகம். அதை விட்டுவிட்டு, உயிருக்குத் தவிக்கும் குழந்தைக்குத் தங்க மோதிரம் மாட்டிவிட்டு ரீல்ஸ் நாடகம் ஆடத் துடிக்கிறது இந்தப் பொறுப்பில்லாத அரசு! என கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: “சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...!