''ஸ்டாலினின் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து 5 கிலோமீட்டர் பேரணியை நடத்தினார். இந்த பேரணி முடிவதற்கு முன்பே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டார்கள். தளபதியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படியொரு முன்னெடுப்பை செய்யவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா எந்த மாநிலமும் இதை செய்யவில்லை. உலகத்திற்கே முன்னோடியாக திகழும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நிரந்தர முதலமைச்சராக இருப்பார்” என ஸ்டாலினை பாராட்டி இருந்தார் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்.

அதே பாணியில் பாணியில் தங்களது தலைவரை அதிமுக பாராட்டி பேசாமல் போனால் சாமி குற்றமென நினைத்த அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் வைகை செல்வன் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிதள்ளி இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!
சென்னை, திருவொற்றியூரில் நடந்த இபிஎஸ்-ன் 71வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசும்போது, ''இந்தியா-பாகிஸ்தான் போர் வருகிறது. ஆகவே பிறந்தநாளை விட்டுவிடுங்கள் என எடப்பாடி பழனிசாமி சொன்னார். நல்லவேளை அண்ணன் எடப்பாடியார் பிறந்தநாளை தெரிந்து கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டு உள்ளனர். அவருடைய பிறந்த நாளுக்காக போர் நிறுத்தத்தையே தள்ளி வைத்து இருக்கிறார்கள்.

ஆகவே அது நன்றாக இருக்கட்டும். நாட்டினுடைய எல்லைக்காக தங்களுடைய இன்னுயிரை கொடுக்கத் துணிந்து கொண்டு இருக்கிற எண்ணற்ற ராணுவ வீரர்களின் வாழ்க்கை நலம் பெற வேண்டும். வளம்பெற வேண்டும். இந்திய எல்லைக் கோட்டில் இருக்கிற ராணுவ வீரர் ஒருவரை தொட்டுப்பார்த்தால் பாகிஸ்தானில் ஓராயிரம் உருளும் என்கிற வகையில் தான் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் செயல்பட்டு வருகிறது '' என வைகைச்செல்வன் பேசினார்.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ''ஏன் இப்படி பன்றீங்க. திமுக என்னவென்றால் ஸ்டாலின் நடைபயணம் செய்ததால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகச் சொல்கிறது. அதிமுக என்னவென்றால் இபிஎஸ் பிறந்தநாளுக்கு போர் ஒத்தி வைப்பு என்கிறது. அங்கே ராணுவ வீரன் நாட்டுக்காக சாகிறான். உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா? அடுத்த வருஷம் எலெக்சன் முடியட்டும் எடப்பாடி பழனிசாமி பேரையை தள்ளி வைச்சிடுவாங்க'' என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!