தேர்தல் தேதியோ , வேட்பாளர்களையோ அறிவிக்கப்படாத நிலையில், திருமங்கலத்தில் திமுக - அதிமுக சார்பில் கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து, நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து படைத்து வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இதுவரை தேர்தல் தேதியோ , வேட்பாளர்களையோ எந்த கட்சியினரும் அறிவிக்கப்படாத நிலையில், திருமங்கலத்தில் திமுக வேட்பாளராக மணிமாறன் என கூறிக்கொண்டு திமுகவினர் , கிராமம் கிராமமாக கலைஞரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு ,100 நாட்களுக்கு தொடர்ந்து கிராம மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து படைத்து , வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று, அதிமுக சார்பில் ஆர்.பி. உதயகுமார்,எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு 100 நாட்களுக்கு தொடர்ந்து, கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து , அசைவ உணவு அளித்து வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். திமுக - அதிமுக 2 கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தற்போதே தேர்தல் பணியை துவக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக.. விளாசிய எடப்பாடி பழனிசாமி..!
இதையும் படிங்க: திமுகவுக்கு மக்கள் ஆப்பு அடிப்பார்கள்... ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...!