சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்துள்ள திருக்குறள் திரைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகம் எப்படி வாழ்ந்தது வீரம் எவ்வாறு செரிவாக இருந்தது. குடும்ப வாழ்க்கை எவ்வாறு இனிமையாக இருந்தது என இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் நமக்கு தேவைப்படுகிறது, இந்த சமூகம் வழி தவறி போய்விடக் கூடாது அறம் தழைத்து ஒரு சமூகமாகவே இது தன்னை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் திருக்குறள். இதற்கு திருவள்ளுவர் என்று கூட பெயர் வைக்காமல் திருக்குறள் என பெயரிட்டு இருப்பதில் இயக்குனர் பாலகிருஷ்ணன் பார்வை எவ்வளவு பொறுப்புள்ளதாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஒவ்வொரு குரளுக்கும் நம்மால் திரைப்படத்தை எடுக்க முடியும். திரைப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் ஒவ்வொருவரும் அருமையாக உள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷா மட்டும்தான் கூறுகிறார்; எடப்பாடி இதுவரை ஏதும் கூறவில்லை... திருமாவளவன் பகீர் கருத்து!!

ஒவ்வொரு தமிழ் குடிமகனும் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த காலத்திற்கு பொருத்தமான குறல்களை தேர்வு செய்து கருப்பொருளாக்கி திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவர் இந்த திரைப்படத்தை பார்ப்பதன் மூலம் திருவள்ளுவருக்கு திருக்குறளுக்கும் முதலமைச்சர் சிறப்பாக அமையும். போதை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் அதை நியாயப்படுத்தக் கூடாது.

பதநீர் வேறு, கள் வேறு. வள்ளுவரை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்றால் கள் அல்லாமையை தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கள் இறக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு மாற்று திட்டங்களை அரசு செய்ய வேண்டும், மாற்று தொழில்களை அரசு சிந்திக்க வேண்டும். கள்ளுண்ணாமை என்பது திருவள்ளுவருடைய போதனைகளும் ஒன்று.. கள்ளும் கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அரசு அதை அங்கீகரிக்கக் கூடாது. அந்தக் கருத்து இந்த திரைப்படத்தில் முக்கியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "தலித்து விரோத நடவடிக்கை" - திமுகவுக்கு எதிராக தீயைப் பற்ற வைத்த திருமா...!