’’பெரியார் மண் என்று என்று பேசாதீர்கள், இது சேர சோழ பாண்டியன் மண். இது என் மண். தமிழ் மண் எங்களுக்கு பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடன் பேசிய சீமான், ‘‘பெரியார் மண் என்று என்று பேசாதீர்கள், இது சேர சோழ பாண்டியன் மண். இது என் மண். தமிழ் மண் எங்களுக்கு பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான் இது பூலித்தேவன் மண், வெலுநாச்சியார் மண், முத்துராமலிங்கத்தேவர் மண், காமராஜர் மண். கக்கன் மண், மருதுபாண்டியர் மண்’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாக்க பாடுபட்ட நிர்வாகிகளை கட்சியின் தலைமை கண்டுகொள்ளவில்லை எனக் கூறி நாம் தமிழர் கட்சியிலிருந்து சேலம் மாநகர பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட 30 பேர் விலகியுள்ளனர்.
இதையும் படிங்க: பெரியாரா? பிரபாகரனா? மோதிப் பார்த்துவிடலாம் - சீமான் ஆவேசம்....
தலைமை மீதான விரக்தியின் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் , இது குறித்து நிர்வாகிகள் அனைவரையும் அழைத்துப் பேசி தீர்வு காண ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சேலத்திற்கு வந்த சீமான் முக்கிய நிர்வாகிகளை அழைக்காமல் ரகசிய கூட்டம் நடத்தியதால் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறுவதாக சதீஷ் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை சரியாக இல்லாததால் கட்சி தொடர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விலகியவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'மெயின்தான் வரணும்... பிராஞ்ச் எல்லாம் வரக்கூடாது… என்னடா காமெடி பண்றீங்க..?': கடுப்பான சீமான்..!