• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘தோழி’ மகளிர் விடுதி! சமூக நலத்துறை - பொதுப்பணித்துறை இடையே புதிய சர்ச்சை! தமிழக அரசு துறைகளுக்குள் புதிய விவாதம்!

    புதிதாக அமைக்கப்பட உள்ள விடுதிகளுக்கான கட்டடங்களை பொதுப்பணித்துறை மூலம் கட்டுவதற்கு பதிலாக, தாங்களே கட்டிக்கொள்ள சமூக நலத்துறை விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Tue, 06 Oct 2026 15:09:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thozhi-Womens-Hostels-Social-Welfare-Department-Construction-PWD-Concern

    தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘தோழி’ மகளிர் விடுதிகளுக்கான புதிய கட்டடங்களை சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனம் தானே கட்டிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசுத் துறைகளுக்கான கட்டடங்களை கட்டும் முக்கிய பொறுப்பை வகித்து வரும் பொதுப்பணித்துறையின் பணி குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறையின் கீழ் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான தங்குமிட வசதி வழங்கும் வகையில் ‘தோழி’ என்ற பெயரில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 20 மாவட்டங்களில் செயல்படும் 25 மகளிர் விடுதிகளில் 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், 14 மாவட்டங்களில் புதிய மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: ரேஷன் பருப்பு கொள்முதலில் ரூ.187 கோடி மிச்சம்! திமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்தது அம்பலம்!!

    இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட உள்ள விடுதிகளுக்கான கட்டடங்களை பொதுப்பணித்துறை மூலம் கட்டுவதற்கு பதிலாக, தாங்களே கட்டிக்கொள்ள சமூக நலத்துறை விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கான அதிகாரம் அந்த நிறுவனத்துக்கு இருந்தாலும், பொதுப்பணித்துறையைப் போன்று போதுமான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு இல்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    PWD

    பொதுவாக அரசு கட்டடங்களுக்கான திட்டம், ஒப்பந்தப்புள்ளி, கட்டுமானம், பணியின் தரத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. கட்டுமானம் முடிந்த பிறகு கட்டடத்தின் தரம் தொடர்பாக ஆய்வு செய்து அரசிடம் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படுகிறது.

    ஆனால், மகளிர் விடுதி நிறுவனமே கட்டுமான பணிகளை மேற்கொண்டால், தேவையான தொழில்நுட்ப பணிகளுக்காக பொதுப்பணித்துறையில் இருந்து பொறியாளர்களை அயல் பணியாக அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே சில அரசு அமைப்புகளில் இதுபோன்ற நடைமுறை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    ஒவ்வொரு துறையும் தங்களுக்கான கட்டடங்களை தாங்களே கட்டத் தொடங்கினால், பொதுப்பணித்துறையின் பணிப்பரப்பு குறைந்து அதன் நிர்வாக அமைப்பு பலவீனமடையக்கூடும் என்ற கவலையும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஒரே கட்டுமானப் பணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் ஈடுபடுவதால் ஏற்படும் ஒருங்கிணைப்பு சிக்கல்கள் கட்டடங்களின் தரத்தையும் பாதிக்கக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதியை வழங்கும் ‘தோழி’ திட்டம் விரிவடையும் நிலையில், புதிய கட்டடங்களை யார் கட்டுவது என்ற விவகாரம் தற்போது அரசுத் துறைகளுக்கிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: 15 ஆண்டுகளை கடந்த 40,296 அரசு வாகனங்கள் 2035 வரை இயக்க அனுமதி: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    உடல்நலம்
    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share