உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா என்ற சர்ச்சை இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஆந்திரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2019 முதல் 2024 வரை ஆந்திரா முதல்வராக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்த ஆண்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுத்தார். உச்ச நீதிமன்றம் அரசியலில் கடவுளை இழுத்து வரக்கூடாது என்று எச்சரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கலப்பட நெய் கலந்து ரூ.250கோடி ஊழல்! பூதாகரமாகும் திருப்பதி லட்டு விவகாரம்! சிபிஐ குற்றப்பத்திரிகை!
கடந்த 15 மாதங்களாக தீவிர விசாரணை நடத்திய சிபிஐ குழு, நெல்லூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விலங்கு கொழுப்பு கலந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2021 முதல் 2024 வரை லட்டு தயாரிப்பில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான 68 லட்சம் கிலோ அளவுக்கு செயற்கை நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. பால் பொருட்கள் இல்லாமல் பாமாயில், பாம் கெர்னல் எண்ணெய் போன்றவற்றால் செயற்கையாக தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதால் லட்டுக்கு கசப்பான சுவை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 36 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். லட்டு தயாரிப்பு நிறுவன ஊழியர்கள், நெய் விநியோகஸ்தர்கள், சில அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எந்த அரசியல்வாதியின் பெயரும் இடம்பெறவில்லை.
சிபிஐ அறிக்கை வெளியானதும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜெகன்மோகன் ரெட்டியை ஹிந்து விரோதியாக சித்தரிக்க அவசரப்பட்டு குற்றச்சாட்டுகளை கூறியதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரிய அறிக்கையை மட்டும் நம்பி உறுதிப்படுத்தாமல் பேசியது தவறு என்று கூறுகின்றனர். இப்போது சந்திரபாபு நாயுடு 'ஜீரோ' ஆகிவிட்டார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் கிண்டலடிக்கின்றன.
இதையும் படிங்க: கலப்பட நெய் கலந்து ரூ.250கோடி ஊழல்! பூதாகரமாகும் திருப்பதி லட்டு விவகாரம்! சிபிஐ குற்றப்பத்திரிகை!