சென்னையில் வைத்து டிடிவி தினகரனுடன் செங்கோட்டையனும் ஓபிஎஸும் தனித்தனியாக ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஞாயிற்றுக்கிழமை கூட அண்ணாமலை வந்து டிடிவி தினகரனை நேரில் சந்தித்து கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தி இருந்த நிலையில், தற்பொழுது டிடிவி தினகரனை, ஓபிஎஸும், செங்கோட்டையனும் தனித்தனியாக சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சென்னையில் வந்து ரகசிய சந்திப்பு வந்து நடைபெற்றிருக்கிறது. எந்த இடம் என்பது வந்து தகவல்கள் இல்லை என்றாலும் கூட சென்னையில் இந்த ரகசிய சந்திப்பு என்பது நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிருப்தி காரணமாகவும் அதேபோல கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டும் டிடிவி தினகரனும், அதற்கு முன்னதாக ஓபிஎஸும் கூட்டணியில் இருந்து வெளியேறினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட செங்கோட்டையனும் அதிருப்தி தெரிவிக்கக்கூடிய வகையில் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும், பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு 10 நாட்கள் கெடுவும் கூட விதித்திருந்தார்.
ஒருவேளை அப்படி இபிஎஸ் ஒருங்கிணைக்கவில்லை என்றால் அந்த பணியை நான் செய்வேன் என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கிடையே இத்தகைய ஒரு சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முக்கியமாக இபிஎஸ் உடன் அதிருப்தி ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?, அடுத்த கட்ட முயற்சிகள் என்ன?, தேர்தலை எப்படி எதிர்கொள்வது? ஒருவேளை அதிமுகவை இவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள் என்றால் அதற்கான நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்
ஒருபுறம் டிடிவி தினகரனாக இருக்கட்டும், அதேபோல ஓபிஎஸ் ஆக இருக்கட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற ஒரு கருத்தை குறிப்பிட்டு அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தார்கள். முக்கியமாக டிடிவி தினகரனை பொறுத்தவரைக்கும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நான் அந்த கூட்டணியில் இணைய மாட்டேன் என்றும் பகிரங்கமாக ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போதும் கூட குறிப்பிட்டு பேசி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் கூட அண்ணாமலை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசிய பொழுது, கூட்டணிக்கு மீண்டும் வர அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் அதற்கு தற்போதைக்கு அதற்கான வாய்ப்பு கிடையாது, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அதற்கு வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக டிடிவி தினகரன் மறுத்ததாகவும் கூட சொல்லப்படக்கூடிய ஒரு சூழல்ல இந்த சந்திப்பு முக்கியத்துவமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செல்லாக்காசு! யாரை சொல்றாரு இவரு? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை