குரான் மீது ஆணையாக எந்த காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என உறுதியளிக்கிறோம் என தமிழக வெற்றிக்கழக கொள்கை விளக்க மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநில முதல் கொள்கை விளக்க மாநாடு சேலத்தில் நடைபெற்றது. சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும் போது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டவர்களாக திமுக இருக்கிறது. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இளைஞர்களை கொண்டவர்களாக தவெக இருக்கிறது. அண்ணா, திமுகவை ஆரம்பிக்கும்போது முற்றிலும் இளைஞர்களைக் கொண்டவர்களாக இருந்தது. அதைப் போலவே தற்போது தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. ஆனால் நம்மைப் பார்த்து திமுக கேள்வி கேட்கிறது. பேசிப் பேசி வளர்ந்த திமுகவிற்கு இன்றைக்கு பேச ஆளே இல்லை. அதனால்தான் ஐஏஎஸ் அதிகாரிகளை பேச திமுக பயன்படுத்துகிறது.
ஆட்சி அதிகாரத்திற்கு வராத தவெக-ஐ பார்த்து ஏகப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள். ஆனால், திமுக-வை பார்த்து எந்த கேள்விகளும் கேட்கப்படுவதில்லை. இளைஞர் கூட்டம் அண்ணா-வோடு புதிய ஆட்சியை உருவாக்கியதோ, அதைப் போல தவெக ஆட்சி அமைக்கும். 1967-ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, கொள்கை அரசாக உருவாக்கினார். அவருக்கு பிறகு எம்.ஜி.ஆரின் துணையுடன் கருணாநிதி முதல்வர் ஆனார். 1971-ல் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு தான் எம்.ஜி.ஆர் உணர்ந்தார். தீயசக்தியாக ஒரே குடும்பம் ஆண்டு கொண்டிருந்ததை எதிர்த்து அதிமுக-வை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதே உணர்வுடன், விஜய் தவெக உருவாக்கியுள்ளார். சமூக நீதி, பெரியாரிசம், மார்க்சிஸம் பேசி பேசி ஊழல் நிறைந்த ஆட்சியைத் தான் கருணாநிதி உருவாக்கினார்.
இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமியை விஜய் ஏற்க மாட்டார்” - அதிமுகவை சீண்டி பார்க்கும் பாஜக...!
தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கொள்ளை, கொள்ளை தான் என்று இருக்கிறது. பெரியாரிசம் பேசி ஆட்சிக்கு வந்த திமுக இன்று வலுவாக இல்லை. திமுகவின் ஊழல்கள் தான் பாரதிய ஜனதாவை வளர்த்து வருகிறது. இதைப் பேசினால் அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியின் போது சாமான்ய மனிதனாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, சிஏஏ-க்கு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் விஜய் கலந்து கொண்டனர். பெரியாரிசத்தை பெயரளவுக்கு பேசிக் கொண்டு சமூக நீதியை தூக்கி எறிந்து விட்டு ஆட்சி நடத்தும் திமுகவை அரசியல் எதிரானப் போக்கைக் அறிவித்துள்ளோம். அதிமுகவில் ஜெயலலிதா மோடியா, லேடியா என குரல் எழுப்பிய நிலை இன்று இல்லை. இன்றைக்கு பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டு, இன்றைக்கு அந்தக் கூட்டணிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை. நாங்கள் ஏன் எதிர்க்கவில்லை என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டார்கள் என்பதால் தான்.
எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா கட்சி வளர்த்தாரோ அந்த நோக்கத்தில் அதிமுக இன்றைக்கு இல்லை. இன்றைக்கு பாரதிய ஜனதாக் கட்சியை உறுதியாக தைரியமாக எதிர்ப்பவர் விஜய் மட்டும் தான். குரான் மீது ஆணையாக எந்த காலத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என உறுதியளிக்கிறோம். எங்களுடைய நோக்கத்தில் தெளிவாக இருக்கிறது. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எப்போது எங்களுடன் இணைந்து விட்டார்கள். ஒரே முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும்தான். எங்களது நிலைப்பாட்டை, கொள்கையை தெளிவாக சொல்லி விட்டோம். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தும் பத்திரிக்கையாளர்கள் இதற்கு மேலாவது தவெக-ஐ விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
1967-ல் திமுக ஜெயித்தது போல, 1977-ல் அதிமுக ஜெயித்தது போல இளைஞர்களை கொண்டு இம்முறை தமிழக வெற்றிக்கழகம் ஜெயிக்கும். தனிக்கட்சி தொடங்கி வைகோ, விஜயகாந்த் இருவரும் 10 சதவீத வாக்குகளை தாண்டவில்லை. தவெகவிற்கு 25 சதவீத வாக்குகள் இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் 30 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று விஜய் முதலமைச்சர் ஆவார். காங்கிரஸ் கட்சியை உயிருடன் திமுக முழுங்கி வருகிறது. காமராஜரை தொட்டால் காங்கிரஸ் வருகிறதோ இல்லையோ , தவெக வரும். எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால் யாராலும் வெற்றி பெற முடியாது.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை! காமுகனை பிடிப்பதில் என்ன அலட்சியம்? தவெக முற்றுகை போராட்டம்