ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய பவளத்தம்பாளையத்தில் அனுமதி கேட்டு நேற்று தவெக.வினர் மனு அளித்திருந்த நிலையில், தற்போது பெருந்துறையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் வரும் 16 அன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பிரச்சாரம் மேற்கொள்ள அதற்கான இடம் தொடர்பான அனுமதி கேட்டு நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஈரோடு எஸ்பி இடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் கடிதம் வழங்கியிருந்தனர்.
பவளத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஏழு ஏக்கர் நிலம் மற்றும் பெருந்துறை சரளை பகுதியில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தையும் பார்வையிட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? உண்மை நிலவரம் குறித்து தவெக நிர்வாகிகளிடம் CBI துருவித் துருவி விசாரணை..!
இந்நிலையில் இன்று தவெக மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையிலான நிர்வாகிகள் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலத்தில் விஜய் வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்துள்ளனர்.
குறிப்பாக வரும் 16 இல் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு பிரச்சாரக் கூட்டத்திற்கு பத்தாயிரம் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் எக்காரணத்திலும் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் போதுமான வாகனங்கள் நிறுத்தும் வசதி இருப்பதால் அனுமதி வழங்குவதோடு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: QR கோடு முக்கியம்... இதெல்லாம் செய்யவே கூடாது.. விஜய்யின் புதுவை மக்கள் நிகழ்ச்சி நிபந்தனைகளை வெளியிட்ட தவெக...!