தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஈரோடு பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுக்கும் விதமாகத் தவெக நிர்வாகி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக அனுமதி மறுப்புக் கடிதம் எதுவும் வரவில்லை என்றும், மாற்று இடத்திற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அனுமதி கோரப்பட்ட வாரி மஹால் அருகாமையிலே இருக்கிற இடத்தின் அனுமதியைப் பொறுத்தவரையில், இன்னும் மறுக்கப்பட்டதாக எங்களுக்குக் கடிதங்கள் வரவில்லை. பத்திரிகை செய்திகள் மறுக்கப்பட்டதாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட துறையைக் (காவல்துறையைக்) கேட்கின்ற போது, "அது போன்ற கடிதம் நாங்கள் அனுப்பப்படவில்லை. யாருக்கும் அந்தத் தகவல் கொடுக்கப்படவில்லை. அப்படி மறுக்கப்பட்டால், உங்களுக்கு மட்டும்தான் கடிதம் என்று முதலில் எழுதுவோமே தவிர, பத்திரிகையிலே வருகிற செய்திகள் எங்கள் மூலமாக வெளியிடப்படவில்லை" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்கின்ற வகையில், மாற்று இடமும் அவர்களுக்குத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, கடிதங்கள் இப்போது வழங்க இருக்கிறோம்.
குறிப்பாக, டோல்கேட் இருக்கின்ற இடத்தில், விஜயமங்கலத்திற்கு அருகாமையில், பதினாறு ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது வருகின்ற பிரச்சாரக் கூட்டத்திற்கும், வாகனங்கள் பாதுகாப்பாக வருவதற்கும், வருகின்றவர்களுக்கு இடமளிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். தவெக நிர்வாகிகள் எச்சரிக்கையாகவே மாற்றிடம் ஒன்றைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், அந்தப் பணிகளை மேற்கொண்டு, அதற்கான கடிதங்களைக் கூடுதலாகப் பெறுகிறார்கள்.
இதையும் படிங்க: போதிய வசதிகள் இல்லை: விஜய் பங்கேற்கும் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி. அனுமதி மறுப்பு!
பொதுமக்கள் வருகிறார்கள். கூட்டம் எவ்வளவு பெரியது, இங்கு நடத்துவது நல்லதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு முன்பு வருவாய் துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வார்கள். கூட்ட நெரிசலைப் பொறுத்தவரையில், சுமார் 10,000 கட்சி உறுப்பினர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தலைவர் விஜய் அவர்களின் இந்தப் பயணம், தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும், ஒரு மாத காலத்திற்குப் பிறகு, எழுச்சிப் பயணமாக அந்தப் பயணம் அமையும்.
விஜய்யின் வருகைப் பயண நேரம் மற்றும் சென்னை புறப்படும் விவரங்கள் ஒரு நாள் முன்பு பத்திரிகை மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இணைந்த அடுத்த நாளே பதவி: தவெகவின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தை நியமித்து விஜய் உத்தரவு..!!