கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தில் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: கமல் கட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை...! பரபரப்பு...!
இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக விட்டுக் கழகத்தின் நிர்வாகி மதியழகனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை... அசாம் DSP அதிரடி கைது...!