வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், " எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யாரையும் நம்பி ஓட்டு போட மாட்டோம்" என்று நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார்.
தொடர்ந்து குட்டிகதையோடு பேசித்தொடங்கிய விஜய் , " ஒரு பெரிய ஊரில் நான்கு சாலைகள் சந்தித்துக் கொள்ளும் ஜங்ஷன். அங்கே ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை சீறிக்கொண்டு நிற்கிறது. அந்த காளையை அப்புறப்படுத்தினால்தாம் அந்த இடம் அமைதியாகும். அந்த காளையை அடக்கி பழக்கப்பட்டவர்கள் அங்கே இல்லை. ஒரு சிலர் நாங்க பார்க்காத காளையா என இறங்குகிறார்கள்.காளை அவர்கள் தூக்கி வீசி எறிகிறது. இப்போது ஒரு சின்னப்பையன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு காளையை அடக்க வருகிறான். 'எங்களாலயே முடியல உன்னால எப்படி'னு மத்தவங்க குறைச்சு மதிப்பிடுறாங்க. ஆனா அந்த பையன் கெத்தா ஸ்டைலா உள்ள போறான். காளை சீறுது. பையன் பார்க்குறான். டக்குனு பாக்கெட்ல இருந்த புல்ல எடுத்து மாட்டுக்கு கொடுக்குறான். மாடு ரொம்ப அமைதியா புல்ல சாப்பிட்டுக்கிட்டே பையங்கிட்ட வந்திடுது.
ஒரு வயசானவர் எப்படிப்பா காளையை அடக்குனேன்னு கேட்டாரு. 'ஐயா எனக்கு அந்த காளை கோபமா இருந்தா மாதிரி தெரியல. பசியா இருந்துதுன்னு உணர்ந்தேன். அதனால புல்ல கொடுத்த உடனே அமைதியா வந்துடுச்சு'னு சொன்னான். அவ்வளவுதாங்க. வயசு, அனுபவம் எதுவும் பெருசு இல்ல. பிரச்னையை எப்படி அணுகுறோங்றதுதான் முக்கியம். அந்த காளைதான் தமிழ்நாட்டு அரசியல். அந்த பெரியவர் தான் தமிழக மக்கள். அந்த பையன் தான் நீங்க நான் எல்லாம்.
இதையும் படிங்க: செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... சட்டைப்பையில் விஜய் உடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டோ... காரணம் என்ன?
உங்க எல்லாரையும் உங்க ஊர்ல நேர்ல வந்து சந்திக்கணுங்றதுதான் என்னோட ஆசை. ஆனா, நமக்கு அழுத்தம் கொடுக்கப்படுது. இப்போ நான் ஒரு உறுதி கொடுக்குறேன். நம்ம ஆட்சி அமைந்த உடனே ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேர்ல வரேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டுனாரு.இது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தலாம். நீங்க என்ன பிரதமரா ஆகப்போறீங்களா சார்?
இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் எதிரான போர். இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒழுங்கா நிர்வாகம் பண்ணாத ஸ்டாலினுக்கும் நடக்குற போர். இன்னும் சொல்லப்போனா ஸ்டாலின் சாருக்கும் விஜய்க்கும் நடக்கும் போர்
தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாம். ஆம், தமிழ்நாடு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்தில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. இப்போது ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனின் மாநிலமாக இருக்கிறது. இது சாதாரண தேர்தல் இல்ல. 50 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலா பாருங்க. இது ஒரு அதிசய தேர்தல்.
எல்லாரும் சேர்ந்து ஒரே ஒருத்தனை எதிர்த்தாலும் போட்டி இங்க திமுகவுக்கும் தவெகவுக்கும்தான். என் மீது அவதூறு பரப்புவது மக்கள் மீது அவதூறு பரப்புவது போன்றது. எனக்கு அரசியல் தெரியாது என கூறுவது மக்களுக்கு அரசியல் தெரியாது என கூறுவது போன்றது. நானும் மக்களும் வேறில்லை. கடைசியில் யாருமே எதிர்பார்க்காத விதமாக மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
சுவாரஸ்யமாக குட்டி கதை சொன்ன விஜய், மீண்டும் சுற்றி வளைத்து நான் ஏன் வெளியே வரலைன்னா? தமிழ்நாடு அரசு என் மீது அழுத்தம் கொடுக்கிறது. கட்டுப்பாடுகளை விதிக்குது. அதனால் தான் உங்களை சந்திக்க முடியவில்லை என பட்டும் படாமல் விளக்கம் கொடுத்தார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையில் ஆரம்பித்து கடைமட்ட மக்கள் வரை விஜய் எப்போது வீட்டை விட்டு வெளியே வருவார், மக்களை நேரில் சந்திக்காமல் எப்படி அரசியல் செய்ய முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வரும் நிலையில், குட்டி ஸ்டோரி என்ற பெயரில் ஏதோ ஒன்றை சொல்லி, சி.ஆம். ஆனால் பனையூரைத் தாண்டி ஊர் ஊராக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விசிட் அடிப்பேன் என்பது போல் விஜய் பேசியிருப்பது சோசியல் மீடியாக்களில் விமர்சனமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தீய சக்திக்கு END CARD… என் ஆட்சி எப்படி இருக்கும் தெரியுமா? பக்காவாக லிஸ்ட் போட்ட விஜய்..!!