உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டமே கிறிஸ்துமஸ் பண்டிகை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் இப்பண்டிகை, ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இது வியாழக்கிழமை அன்று வருகிறது.
இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் சமத்துவக் கோட்பாட்டுடன் இணைத்து விழாவாக நடத்தி வருவது வழக்கம். அந்த வரிசையில், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இன்று கொண்டாடி வருகிறது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துக் கொண்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் இந்த சமத்துவக் கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பின்படி, இவ்விழா மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைவரும் நிறுவனருமான விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!
இது தவெகவின் கொள்கைகளான சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. திருக்குறளில் கூறப்பட்ட பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தவெக, இத்தகைய விழாக்கள் மூலம் அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விழாவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர்.
1500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழா தொடங்கியதும் முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்துவ பாடல்கள் இசைக்கப்பட்டன.
இதையும் படிங்க: தவெகவின் முதல் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா... விஜய் வருகையால் களைக்கட்டிய அரங்கம்...!