தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று தூத்துக்குடி, தென்காசி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து, தவெக தலைவர் விஜய் கேடிசி நகர் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாதோப்பு, தொழுதூர் ஆகிய நான்கு இடங்களில் தவெக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
இதையும் படிங்க: வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!
காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் இது குறித்து பரிசீலனை மேற்கொண்டனர்.தற்போது 16 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் ஹெலிகாப்டர் மூலம் விஜய் வருவதாக இருந்த நிலையில் தற்போது அது சாலை மார்க்கமாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விழுப்புரம் -நாகை நான்கு வழிச்சாலை வழியாக கடலூருக்குள் விஜய் வருகின்றார்.கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் மக்களிடம் உரையாற்றுகிறார். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் பிரச்சாரத்தை கடலூரில் முடித்து விட வேண்டும்.
விஜய் வரும் பிரச்சார வாகனத்தை யாரும் தொடர்ந்து வரக்கூடாது; பிரச்சார வாகனத்தின் மீது ஏறுவது கூடாது. குழந்தைகள் கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் குடிநீர் மருத்துவம் ஆம்புலன்ஸ் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட 16 நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நன்நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல். கடலூரை அடுத்து வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூர் ஆகிய பகுதிகளிலும் விஜய் வேன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி..! தவெக செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு..! விளக்கம் கேட்டு கெடு விதித்த அதிகாரிகள்..!