நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’,‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.
அதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். விஜய் உடைய மாநாடு, பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம் என அனைத்திற்கும் அவருடைய பவுன்சர்களுடன் சேர்ந்து ஒய் பிரிவு காமாண்டோக்களும் பாதுகாப்பு வழங்கினர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தன்னை சுற்றியுள்ள பாதுகாப்பு படையினர் மீதே விஜய் சந்தேகத்தில் இருக்கிறாராம். தமிழ்நாடு உளவுத்துறை தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் டீப்பாக கண்காணித்து வருகிறது என விஜய் நம்புகிறாராம். குறிப்பாக கரூர் விவகாரத்தில் விஜய் உடைய அடுத்தக்கட்ட மூவ் என்ன, எப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் போன்றவற்றை எல்லாம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தவெக தரப்பு சந்தேகிக்கிறது.
இதையும் படிங்க: “மாடு மேய்க்குறவன் கூட இப்படி பேச மாட்டான்...” - அன்புமணியை மட்டுமல்ல விஜயை விட்டு விளாசிய ராமதாஸ்...
குறிப்பாக இப்போது தனக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎப் அதிகாரிகள் தமிழக உளவுத்துறையோடு நெருக்கமாக இருக்கலாம் என விஜய் கைக்கு ஒரு ரிப்போர்ட் போயிருக்கு. அதனை பார்த்ததுமே, உடனடியாக அவங்களை மாத்தி தமிழ்நாட்டுக்கு தொடர்பில்லாத வடநாட்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் உடைய பாதுகாப்பு குறித்து சிஆர்பிஎஃப்யிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒய் பிரிவு பாதுகாப்பை இசட் பிரிவு பாதுகாப்பாக உயர்த்த ஏற்கனவே பாஜக திட்டமிட்டுள்ளதாம். அப்போது விஜய் சொன்னது போல் தமிழ்நாட்டுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் கட்சியின் மறுபக்கம்... வீட்டிற்குள் கஞ்சா பதுக்கிய தவெக நிர்வாகி கைது...!