தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டங்களில் அவர் நடந்துகொள்ளும் பாணியைப் பார்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்குறிச்சியில் நடந்த திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் அதே போன்று நடந்துகொண்டதாக சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் கடுமையாக பேசியுள்ளார்.
ராஜ்மோகன் பேசியதாவது: “அதே டெய்லர், அதே வாடகை. ராம்ப் நடைபோட்டு, சிவப்பு கம்பளம் விரித்து, பின்னணி இசை போட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகிறார்கள். மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை இன்னொருவருடையது. அந்த பேண்ட் கலர்கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடிக்கிறார்களா என்று கேட்கிறேன். கீழே இருந்து துண்டு எடுத்து வீசி, அதை எடுத்து போட்டுக்கொள்வதைப் பார்த்தோம்.
பொதுவாக நம்முடைய தளபதிக்கு மலர் கொடுப்போம். ஆனால் அங்கு ஒரு பையன் ஓடிப்போய் பூவைக் கொடு என்று சொல்ல, அவனும் கொடுத்தான். ஆனால் அந்தப் பூவை என்ன செய்வது என்று தெரியாமல் வாங்கிய பூவை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறார். எல்லாவற்றையும் மன்னித்துவிடலாம், ஆனால் அந்த 'செல்ஃபி' எடுத்தார்களே...
இதையும் படிங்க: திமுகவுக்கு மறைமுக பிரசாரம்!! மாரி செல்வராஜை களமிறக்க திட்டம்! தவெக விஜய்க்கு போடும் ஸ்கெட்ச்!

சிவப்பு கம்பளத்தில் நடந்து வருபவர்கள் எல்லாம் அரசியலில் ஜெயித்துவிட முடியாது. கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்! மக்கள் வெள்ளத்தில் ஆண்களும் பெண்களும் புடைசூழ, ஒரு மாபெரும் திருவிழாவைப் போல அன்புக் கடலில் மக்கள் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்.
மேடையில் ஒன்றியம் முதல் மாவட்டம் வரை, மாநில அளவில் அத்தனை நிர்வாகிகளும் புடைசூழக் காத்திருக்க, மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிற அந்தச் சப்தத்திற்கு நடுவே, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போகிற என் தங்கத் தளபதி, தலைவர் நடந்து வருகிறபோது... அதைச் சொல்லும்போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. முதலமைச்சர் அண்ணனை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி, அதில் மாற்றுக்கருத்து இல்லை.”
ராஜ்மோகனின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விஜய் பாணியை ஸ்டாலின் காப்பி அடித்ததாகவும், அதை விமர்சித்து ராஜ்மோகன் பேசியது சரியானது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் தேர்வில் களமிறங்கும் ஆர்.எஸ்.எஸ்!! MLA சீட் யார் யாருக்கு? பதற்றத்தில் முக்கிய தலைகள்!