தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மதிமுக சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என வைகோ அறிவித்துள்ளார். தனிச்சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் தனி சின்னமான தீப்பெட்டி சின்னம் பெறப்பட்டதால் அதிமுகவினர் உதயசூரியன் சின்னம் இல்லாமல் இருப்பதால் அதிமுக வெற்றி பெற்று விடும் என நினைத்தவர்களுக்கு தற்போது மதிமுக தனி சின்னம் வேண்டாம் உதயசூரியன் சின்னத்தின் நிற்பதாக அறிவிப்பால் சீர்காழி அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்ததால் வைகோ உயிருக்கு ஆபத்து என பரப்பி வருகின்றனர்
பயத்தின் காரணமாக சீர்காழியில் மதிமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், துரை வைகோ பாஜகவில் மத்திய அமைச்சர் பதவி விரும்பி கேட்டு வருகிறார். செத்தாலும் தனி சின்னத்தில் போட்டியிடுவேன் எனக்கூறிய துரை வைகோ தைரியம் இருந்தால் தீப்பெட்டி சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கூறிய மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் , அதிமுக மாநில ஜெ.பேரவை செயலாளர் மார்கோனி சீர்காழியில் தெரிவித்துள்ளார். மேலும் துரை வைகோவால் வைகோ உயிருக்கே ஆபத்து இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு இழுப்பறி... அடம் பிடிக்கும் CPM... சமாதான பேச்சுவார்த்தைக்கு களமிறங்கிய வைகோ..!!
இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!