விஜய் அரசியல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும், முதல்வர் ஸ்டாலினை குறித்து குறை சொல்லி விமர்சித்து பேசுவதற்கு எந்த தகுதியும் விஜய்க்கு கிடையாது என எம் பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கினைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் எம் பி ரவிக்குமார் தலைமையில் விழுப்புரம் DRDA அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தஎம் பி ரவிக்குமார் நூறு நாள் வேலை திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 272 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு 180 கோடிக்கான பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் மீதமுள்ள தொகைக்கு கரும காரிய கொட்டகை கட்டிதர வேண்டுமென வலியுறுத்தப்பட்தாகவும் பிரதமமந்திரி திட்டத்தின் மூலம் வீடுகள் விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென என்றும் விவசாயிகளுக்கு பிரிமியம் தொகையை இலவசமாக அல்லது மானியமாக தரவேண்டுமென நாடாளுமன்ற கூட்டதொடரில் இதனை முன் வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடி தான் எல்லாத்துக்கும் காரணம்..! பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்... விசிக வலியுறுத்தல்...!
தமிழக வெற்றிக்கழக தலைவர் 2026 தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டியாக இருக்கும் என தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கொள்கை எதிரி பாஜக என கூறிவிட்டு திமுக தான் தனக்கு எதிரி என பேச ஆரம்பித்துள்ளார்.
தற்போது பாஜக குறித்து பேசுவதில்லை ஆரம்பத்திலையே அவருடைய அரசியல் என்னவென்று தெரிவதாகவும், விஜய்யுடன் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டு புதியதாக கட்சி ஆரம்பித்து கூட்டணி வைத்தால் கூட 2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார்.
ராகுல் காந்தி ஹரியான மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்று உள்ளதை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார். பீகாரில் 81 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளார்கள் அதே போன்று தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் வாக்கு பறிபோக உள்ளது. திட்டமிட்ட பெயரில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி சதி வேலையாக இருக்கிறது. எஸ் ஐ ஆர் தமிழகத்தில் தொடங்கி இருப்பது தமிழகத்தின் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக பாஜக திட்டமிட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
விஜய் அரசியல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும் எஸ் ஐ அர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்காமல் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்தார். முதல்வர் ஸ்டாலினை குறித்து குறை சொல்லி விமர்சித்து பேசுவதற்கு எந்த தகுதியும் விஜய்க்கு கிடையாது. அரசியல் என்ன என்பதை தெரிந்து கொண்டு செயல்பட்டால் தான் யதார்தமான கள நிலவரம் அவருக்கு புரியும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்த ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் திருத்தம் மேற்கொள்வதில் சந்தேகம் எழுவதாகவும் வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பயிற்சி கொடுக்காமல் தெளிவுபடுத்தாமல் இந்த பணிகளை செய்ய சொன்னால் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு வருவதால் அவர்களை இந்த பணி செய்ய கூறினால் எப்படி 30 நாட்களில் இந்த பணியை செய்ய முடியும் தேர்தல் முடிந்த பிறகு எஸ் ஐ ஆர் பணிகளை செய்ய கூறலாம் தேர்தலுக்கு முன்னாள் செய்ய கூறினால் பீகார் போன்ற குழப்பம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: NRC தான் அவங்க குறிக்கோள்... SIR குடியுரிமை மீதான தாக்குதல்... உடைத்து பேசிய திருமா