விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர்: சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் எடப்பாளையம் கிராமத்தில் நடந்து வரும் குடிநீர், சாலை, திட்டங்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி. பணிகளின் தரத்தை உறுதி செய்துவிட்டு, அங்கேயே குவிந்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அங்குதான் நிருபர்கள் கேட்டார்கள் – “புதுச்சேரி தவெக கூட்டத்தில் விஜய், ‘புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும்’னு சொன்னாரே… உங்க கருத்து என்ன சார்?”
கேள்வி முடிவதற்குள்ளாகவே பொன்முடி சிரித்தார். பிறகு ஒவ்வொரு வார்த்தையையும் தீட்டி எடுத்து வைத்தார்:
“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு கற்றுக்கொள்ள வேண்டியது ரொம்ப ரொம்ப நிறைய இருக்கு. இப்போதான் அவர் அரசியல் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கார். ஒரு மீட்டிங் போட்டவுடனே எது வேணும்னாலும் பேசிக்கலாம் னு நினைச்சிட்டு பேசிட்டு இருக்கார்.
இதையும் படிங்க: மக்களே தயாரா?... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000... பொங்கல் பரிசை அள்ளித் தர காத்திருக்கும் தமிழக அரசு...!
கரூர்ல மக்கள் கொடுத்த பாடத்துல இருந்து கொஞ்சம் தெளிஞ்சு, இப்போ குறைஞ்சது டயத்துக்கு வந்து டயத்துக்கு சரியா போறார்னா… அப்போதான் கொஞ்சம் பாடம் கத்துக்கிட்டு இருக்கார்னு அர்த்தம்.

இப்போதைக்கு விஜய் LKG-ல தான் படிச்சிட்டு இருக்கார். UKG, 1-ம் வகுப்பு, 2-ம் வகுப்புனு படிப்பு ஏற ஏறத்தான் தெரியும். வரட்டும்… அவர் கொஞ்சம் வளரட்டும்… அப்போ பார்த்துக்கலாம்!”
திமுக ஆதரவாளர்கள் “பொன்முடி சார் ஒரு வார்த்த்தைக்கு நூறு வெடி!” என்று கொண்டாட, தவெக ரசிகர்கள் “இது தேவையில்லாத அவமரியாதை” என்று ஆத்திரத்தில் கொந்தளித்தனர். ஆனால் ல் இரண்டு பக்கமும் ஒரே ட்ரெண்ட் – #விஜய்_LKG !
அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்: “பொன்முடி இப்படி ஒரு ஷாட்டை அடிச்சது வெறும் தனிப்பட்ட பதிலடி இல்லை. திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையே மிகக் கடுமையாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கார். விஜய் இனிமேல் ஒவ்வொரு மேடையிலும் இந்த LKG பஞ்சை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.”
எப்படியிருந்தாலும், ஒரு சின்ன ஆய்வுப் பயணம் முழு தமிழக அரசியலையே ஒரு நாள் முழுக்க பேச வைத்துவிட்டது. அடுத்து விஜய் என்ன பதிலடி கொடுக்கப் போறாரு? UKG-ல சேர்ந்துடுவாரா, இல்லை LKG-லேயே டாப் பண்ணிடுவாரா? காத்திருந்து தான் பார்க்கணும்!
இதையும் படிங்க: கூட்டணி முடிவெடுக்க இபிஎஸ்- க்கே முழு அதிகாரம்... பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்...!