தவெக தலைவர் விஜய் சைதாபேட்டையில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவர் வந்து இன்றைய தினம் வில்லிவாக்கம், தியாகராய நகர் உளிட்ட பல்வேறு பகுதிகளல் பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார். அதுவும் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் கேட்ட அந்த நேரம் ஒதுக்கப்படவில்லை எனக்கூறி விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துடைய தலைவர் விஜய் நாளை சைதாப்பேட்டை தொகுதி உட்பட்ட அரங்கநாதன் சுரங்க பாதை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அனுமதி கடிதமானது தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக தடையில்லா சான்றிதழை காவல் துறையினர் தான் வழங்க வேண்டும். எனவே அவர்களும் அந்த பகுதியில ஆய்வு செய்து மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், தற்போது சைதாப்பேட்டை தொகுதி பிரச்சாரம் வந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக அந்த கடிதத்தில பல்வேறு தகவல்களும் குறிப்பிட்டு கடிதமானது இந்த தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கநாதன் சுரங்க பாதைக்கு அருகே தான் தவெக தலைவர் பரப்புரை மேற்கொள்ள இருந்ததாகவும், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொள்ளவும், கூடுதலாக ஐந்து ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!
பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவார்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தலானது வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இன்று வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகரில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரமும் ஒரு மணி நேரத்திற்குள்ள முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
இதே காரணத்திற்காக நாளை சைதாப்பேட்டை தொகுதியில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக தவெகவினர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று இதுகுறித்து முறையிட இருப்பதாகவும், மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் நேரத்தையே தனக்கும் கொடுக்க வேண்டும் என்ற முறையிட்டு மனு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: எங்க அண்ணனுக்காக... விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..!! தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் NRI-க்கள்..!!