தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் விஜய்க்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இரு அமைச்சர்களால் சிக்கல் ஏற்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளதாகவும், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இரு அமைச்சர்களின் செயல்பாடுகளும் மத்திய அமைப்புகளின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த மத்திய அமைப்பும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர் தொடர்பாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அமைச்சர் மீது ஊழல் தொடர்பான புகார்கள் இருப்பதாகவும், அவற்றை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒருபக்கம் விஜய்யின் சல்யூட்.. மறுபக்கம் த்ரிஷாவின் ரியாக்ஷன்!! ப்பா.. ஊரு கண்ணே இவங்க மேல தான்..!!

இதற்கிடையே, மற்றொரு தமிழக அமைச்சர் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிலவி வரும் சுமுகமான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருவதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, அவர் தெரிவிக்கும் சில கருத்துகள் பிரிவினை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அந்த அமைச்சரின் பேச்சுகள் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான விவகாரமாக மாறக்கூடும் என்ற கவலையும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக அரசுடன் மத்திய அரசு இணக்கமான உறவை பேண முயற்சித்து வரும் நிலையில், கூட்டணி அமைச்சரின் தொடர்ச்சியான விமர்சனங்கள் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுவதாக தெரிகிறது.
தமிழக அரசுக்கு நிதி விவகாரங்களில் மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்கள் மட்டுமே. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது மத்திய உளவுத்துறை கண்காணிப்பு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியாது.
இதையும் படிங்க: சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?