தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், கட்சியின் உள்ளாட்சி மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்த அதிருப்தி வெளிப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான குரல்கள் வலுத்தன. இந்தச் சூழலில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் ஒரு அணி உருவானது. இந்தப் பிரிவினை அதிமுகவை இரு அணிகளாகப் பிளந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்தப் பிரிவு அதிரடியாகச் செயல்பட்டது. இபிஎஸ் தரப்பின் கொறடா உத்தரவை மீறி, சண்முகம்-வேலுமணி அணியைச் சேர்ந்த சுமார் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கட்சியில் பதவி பறிப்பு, தகுதி நீக்க மனுக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து ராஜினாமா செய்தனர்.

இந்தச் சம்பவங்கள் அதிமுகவின் உள்ளகப் பிரச்சனையை பொதுவெளியில் கொண்டு வந்தன. பின்னர் இரு அணிகளும் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்கக் கோரிய கடிதத்தை அளித்தன. முன்பு இரு தரப்பும் அளித்த புகார் மனுக்கள், தகுதி நீக்கக் கோரிக்கைகள், கொறடா தொடர்பான மனுக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றனர். மன்னிப்புக் கடிதங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம் அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன.
இதையும் படிங்க: #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். விராலிமலை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன் என்று கூறியுள்ளார். 2001 காலத்தில் இருந்து பொதுவாழ்வில் பயணித்துள்ளேன் என்றும் கொரோனா காலத்திலும் உயிரை துச்சம் என நினைத்து பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய போவதாக எழுப்பிய கேள்விக்கு யூகம் என்று பதில் கொடுத்தார். நான் எப்படி இருக்க வேண்டும் என தொகுதி மக்கள் விரும்புவதை தான் நிறைவேற்றுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். நான் ரொம்ப நிதானமாக பொறுமையாக அமைதியாக உள்ளேன் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகிகளை தான் சந்தித்தது உண்மைதான் என்றும் அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி இருப்பதாகவும் கூறினார். எம்ஜிஆர் ஜெயலலிதாவடியில் தொடர்ந்து பயணிக்கிறேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திக்... திக்... திருப்பம்...!! - எகிறி அடித்த இபிஎஸ் Vs விட்டுக்கொடுக்காத சிவிஎஸ்... அதிமுகவில் நடப்பது என்ன?