சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பெரிய பொதுக்கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி சென்னை துறைமுகம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மழையால் சேறும் சகதியுமாக இருந்த மைதானம் இப்போது முழுவதுமாக மணல் நிரப்பப்பட்டு, தரை ஷீட் போடப்பட்டு, பிரமாண்ட கூட்டத்திற்கு தயாராக உள்ளது.
சென்னை காவல்துறை கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. மைதானத்தின் பாதி பகுதி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேர் மட்டுமே அனுமதி, கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை, காலை 10:30 முதல் மதியம் 12 மணிக்குள் கூட்டம் முழுமையாக முடிக்கப்பட வேண்டும், QR கோட் மூலம் மட்டுமே நுழைவு, போதிய குடிநீர் வசதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஏற்ப தவெக தொண்டர்கள் அசுர ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மைதானத்தில் 60,000 லிட்டர் தண்ணீர் தொட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 20,000 தண்ணீர் பாக்கெட்கள், மிக்சர், பிஸ்கெட் பாக்கெட்கள் தயாராக உள்ளன. வரும் ஒவ்வொரு தொண்டருக்கும் தண்ணீர் + ஸ்நாக்ஸ் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிடைச்சாச்சு பர்மிஷன்! புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!! சொன்ன தேதியில் நடக்கும்! டோண்ட் வொர்ரி!

5000 தொண்டர்கள் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு நிற்கும் இடத்தில் 500 பேர் மட்டுமே இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தரை ஷீட், வேலிகள், பேனர்கள் என மைதானம் முழுவதும் தவெக கொடிகளால் நிரம்பி வழிகிறது.
காலை முதலே தொண்டர்கள் மைதானத்திற்கு வந்து ஏற்பாடுகளை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். “தலைவர் விஜய் வரும் முதல் கூட்டம்… எப்படியும் 5,000 பேர் என்றாலும் உலகையே காட்டிடுவோம்” என்று தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
விஜய்யின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் தமிழகமே கவனம் செலுத்தியுள்ளது. QR கோட் மூலம் நுழைவு, கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் தவெகவின் ஏற்பாடுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: கிடைச்சாச்சு பர்மிஷன்! புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!! சொன்ன தேதியில் நடக்கும்! டோண்ட் வொர்ரி!