இன்று 31 வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே உள்ள கோவளத்தில் நட்சத்திர விடுதியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த மாநாட்டில் ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் ஐந்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதற்கான காரணத்தை தற்போது புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கோவளத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது.
இதையும் படிங்க: அமித் ஷா அருகே விஜய்... தொடங்கியது தென்மாநில முதல்வர்கள் மாநாடு... டி.கே.சிவக்குமாருக்கு காத்திருக்கும் சிக்கல்...!
இந்நிலையில், இன்று நடைபெற உள்ள தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொள்ள உள்ளதால், முதலமைச்சர் ரங்கசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்காத நிலையில், பாஜக மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவே அவர் இந்த தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இருப்பினும், புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கலந்து கொள்ள உள்ளதால், இந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு... தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு திடீர் ஷாக் கொடுத்த புதுவை முதல்வர்...!