சென்னை மாநகரில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான கௌரவ் குமார் என்பவர், தனது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயது குழந்தையுடன் சென்னைக்கு வேலை தேடி வந்திருந்தார். அவர் தரமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்தக் குடும்பத்தினரை ஒரே நேரத்தில் கொலை செய்து, உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் ஜனவரி 26, 2026 அன்று வெளிச்சத்துக்கு வந்தது. அன்று காலை, சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூம் அருகே சாலையோரத்தில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூட்டையைத் திறந்து பார்த்த போலீசார், கௌரவ் குமாரின் சடலத்தைக் கண்டனர். அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் இருந்தன.

அவரது பாக்கெட்டில் இருந்து கிடைத்த தொலைபேசி எண்களை வைத்து அடையாளம் கண்டறிந்த போலீசார், அவரது மனைவியும் குழந்தையும் காணாமல் போயிருப்பதை அறிந்தனர்.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த மூட்டையை வீசியதைப் பார்த்தனர். அந்த வாகனத்தைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கௌரவ் குமாருக்கு தெரிந்தவர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர். சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள் கிடைத்தன.
இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி… ரவுடி வெள்ளைக் காளியை சென்னை அழைத்து வந்த போலீஸ்..!
கௌரவ் குமாரின் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையையும் கொலை செய்தது தெரியவந்தது. கௌரவ் குமார் மற்றும் குழந்தை ஆகியோரின் சடலங்கள் கிடைத்த நிலையில் பெண்ணின் சடலத்தை குப்பை கிடங்கில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பெருங்குடி குப்பை கிடங்கில் மூன்றாவது நாளாக பெண்ணின் சடலத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று கௌரவம் குமார் மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வடமாநில இளைஞரின் குடும்பமே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..! சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்..! முக்கிய அறிவிப்பு..!