இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட்டில் நடைபெற்றது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் 9 ரன்களிலும் விராட் கோலி டக் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 73 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ் 11 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 28 ரன்களிலும், மாட் ரீன்ஷா 30 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.
இதையும் படிங்க: இறுதி கட்டத்தில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்..!! இந்தியா வரி 15-16%க்கு குறைய வாய்ப்பு..??
மேத்யூ ஷாட் 78 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் 22 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி தொடரை வென்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்று இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரஷ்யாகிட்ட இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது..!! மறுபடியும் மறுபடியும் அடித்து சொல்லும் டிரம்ப்..!!