ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி செய்த அதிரடி ஏலத்தின் மூலம், உள்ளூர் வீரர்கள் (Uncapped Players) பிரிவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கார்த்திக் ஷர்மா ஆகிய இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலா ₹14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
₹14.20 கோடி என்பது ஐபிஎல் வரலாற்றில், சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகாத உள்ளூர் வீரருக்கு (Uncapped Player) வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை ஆகும். இதன் மூலம் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா இருவரும் இந்தச் சாதனையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி! மதீஷா பதிரானாவை ₹18 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா!
இதற்கு முன், உள்ளூர் வீரர் ஒருவருக்கு அதிகபட்சமாக ₹10 கோடி வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து, இவ்விரு வீரர்களும் ₹10 கோடி என்ற இலக்கைத் தாண்டி, ₹14 கோடிக்கும் மேல் ஏலம் எடுக்கப்பட்ட முதல் உள்ளூர் வீரர்கள் ஆனார்கள்.
இவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளுடன் தீவிரமாகப் போட்டியிட்டது. இவரை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) ஆகிய அணிகளுடன் சென்னை அணி கடுமையாகப் போட்டியிட்டது.
ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட நிலையில், சிஎஸ்கே ஒரு தரமான சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுக்காகத் தீவிரமாக இருந்தது. நீண்ட கால அடிப்படையில் இந்தியத் திறமைகளில் முதலீடு செய்யும் சிஎஸ்கே-வின் வியூகத்தின் ஒரு பகுதியாக இந்த அதிகப்படியான ஏலம் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலக சாதனை முறியடிப்பு! IPL 2026 ஏலத்தில் ₹25.20 கோடிக்கு விலை போன கேமரூன் க்ரீன்!