தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இந்தாண்டு 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுத் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதல் நாள் தேர்வில் 11,430 பேர் தேர்வெழுத வரவில்லை.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ "ALL PASS" ரத்து: பெற்றோர்களே கேள்வி கேளுங்கள்..! அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் கண்டனம்..!

தேர்வு முடிவுகள் வெளியானதில், மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் - 93.16%, மாணவிகள் - 96.70%. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதில் மொத்தமாக இந்தாண்டு 95.3% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் தமிழ் பாடப் பிரிவில், 135 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம்; தமிழகத்துக்கு கடும் விமர்சனம்... வைரலாகும் எக்ஸ் தள பதிவு!!